4 லட்சம் ரூ.2000 நோட்டுகள் எங்கே?- கே.எஸ். அழகிரி

4 லட்சம் ரூ.2000 நோட்டுகள் எங்கே?- கே.எஸ். அழகிரி
X

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு அஞ்சலி அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் வளையம் வைத்து அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் பாரதப் பிரதமர்,பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 32-ம் ஆண்டு நினைவு தினம் இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில்,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி நினைவு தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதன் செய்தியாளர்களை சந்தித்தபோது, மோடி துக்ளக் தர்பார் ஆட்சி செய்து வருவதாகவும் ஆட்சியில் இல்லாத போது தலைவர்களை கொன்றதாகவும், ஆட்சியில் வந்த போது நல்ல கொள்கைகளை கொன்று வருவதாகவும் தெரிவித்தார்.

எந்த ஒரு திட்டங்களும் அறிவிப்புகளும் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் மீண்டும் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த நிலையில் அதில் பாதி அளவு தான் உள்ளது மீதி எங்கே என கேள்வி எழுப்பினர். திமுகவின் நல்ல செயல் திட்டங்களை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் எம்பிக்கள் சு.திருநாவுக்கரசு, விஜய் வசந்த், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!