புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு எப்போது ?

புதிய ரேஷன் கடை கட்டிடம்  திறப்பு எப்போது ?
X

காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கிடைக்காத புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது

காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியில் நியாய விலை கோடைக்கால புதிய கட்டிடம் ரூபாய் 15.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சி தொகுதி செயலாளர் லாரன்ஸ் மாவட்ட ஆட்சியரிடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடையை திறக்க கோரி மனு அளித்தார்.

அம்மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறு காவேரிப்பாக்கம் பிரிக்கா புத்தேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சத்தில் 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடைக்கான கட்டிடம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டது.

இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு காலம் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் இந்த கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது.

மேலும் இக்கடையை சுற்றிலும் புதிய குடியிருப்புகளும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கும் வகையில் அமைந்து வருவதால் உடனடியாக இந்த புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இதுகுறித்து பலமுறை மாவட்ட உணவுப் பொருட்கள் வழங்கல் அலுவலர் குடிமை பொருள் வட்டாட்சியர் என பலரிடம் அளிக்கப்பட்ட நிலையும் காலம் தாழ்த்தி வரப்பட்டு வருகிறது.

மேலும் நியாய விலை கிடைக்காத வெகு தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலையும் பொது மக்களுக்கு ஏற்படுவதால் புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!