/* */

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தூய்மை பணியாளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கீழம்பி கிராம மக்களுக்கு, எவ்வாறு வாக்களிப்பது, 100சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட ஆட்சியர் கலைச்செல்வி துண்டு பிரசுரங்கள் வழங்கி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்கு பதிவு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் , காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கீழம்பி கிராம பொதுமக்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது, அனைவரும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு எவ்வாறு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ரதத்தினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அக்ராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை பேரணியாக சென்று கிராம வீதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அளித்து அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், அவ்வழியாக வந்த அரசு பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், வட்டார ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர் , ஊராட்சி செயலர் தணிகைமலை உள்ளிட்ட ஒன்றிய அலுவலர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 April 2024 11:45 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
 2. லைஃப்ஸ்டைல்
  அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
 4. லைஃப்ஸ்டைல்
  எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
 5. லைஃப்ஸ்டைல்
  மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
 6. மானாமதுரை
  வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
 7. லைஃப்ஸ்டைல்
  அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
 8. லைஃப்ஸ்டைல்
  பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
 9. குமாரபாளையம்
  பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
 10. லைஃப்ஸ்டைல்
  நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?