காஞ்சிபுரம் அருகே பள்ளி கட்டிட பிரச்சினை தொடர்பாக வி.சி.க. சாலை மறியல்

காஞ்சிபுரம் அருகே பள்ளி கட்டிட பிரச்சினை தொடர்பாக வி.சி.க. சாலை மறியல்
X

காஞ்சிபுரம் அருகே  புதிய பள்ளி கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அதே இடத்தில் தொடங்க வேண்டும் என கூறி விசிகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் சாலை மறியல் செய்ய முயன்றதாக 120 பெண்கள் உட்பட 220 பேர் இன்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

சாலை மறியல் போராட்டத்திற்கு கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் எழிலரசு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் பாசறை.செல்வராஜ்,மாநகர செயலாளர் மதி.ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள ரயில்வேகேட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும், அதனையடுத்து சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் சாலை மறியல் செய்ய முயன்றதாக 120 பெண்கள் உட்பட 220 பேரை கைது செய்தனர்.

இப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் நடைபெற்ற போது ஒரு பிரிவினர் இந்த இடத்தில் பள்ளி கட்டிடம் கட்டக் கூடாது என நீதிமன்றத்தை நாடி தடையாணை பெற்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் இந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றக்கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதும் தொடர்கதையாக இருக்கிறது.

இதற்கான ஒப்பந்த பணி எடுத்த நபரும் தன்னால் காலம் கடந்தமையால் பணி செய்ய இயலாது என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Tags

Next Story