பாதுகாப்பு கோரி எஸ்.பி‌ அலுவலகத்தில் வி.சி.க வழக்கறிஞர் அணி புகார் மனு

பாதுகாப்பு கோரி எஸ்.பி‌ அலுவலகத்தில் வி.சி.க வழக்கறிஞர் அணி புகார் மனு
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசிக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன் தலைமையில் மனு அளித்தனர்

ஆர் எஸ் எஸ் பயிற்சி வகுப்பு நடைபெறுவதை தடுத்து நிறுத்தியதால் , சமூக இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் காரணம் என்று இந்துத்துவ சக்திகள் தவறாக புரிந்து கொண்டு விடுதலை சிறுத்தைகளுக்கு ஆதரவாக செயலாற்றிக் கொண்டு இருக்கின்ற முற்போக்கு இயக்கங்களை குறி வைத்து தாக்க முயற்சிப்பதை தடுக்க பாதுகாப்பு அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் த.பார்வேந்தன் தலைமையில் புகார் மனு அளித்தனர்.

அம்மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் த.பார்வேந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றுசேர்ந்து ஆர் எஸ் எஸ் அமைப்பு திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கோடு ஆட்சிக்கு எதிராக அவதூறு பரப்புதல், இந்துத்துவ சனாதன சக்திகள் தொடர்ந்து ஆட்சிக்கு எதிராக அவதூறு பரப்புதல், வன்முறை செய்ய தூண்டுதல், பெரியாரிய, ஜனநாயக முற்போக்கு சிந்தனை கொண்ட சிந்தனையாளர்கள் மீது தனிமனித தாக்குதல் நடத்துதல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 02.10.2022 அன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த அணிவகுப்பு அன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் முற்போக்கு இயக்கங்கள் சார்பாக சமூக நல்லிணக்க பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இவை சம்பந்தமாக தமிழக அரசால் இந்த இரண்டு பேரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் தான் காரணம் என்று இந்துத்துவ சக்திகள் தவறாக புரிந்து கொண்டு விடுதலை சிறுத்தைகளுக்கு ஆதரவாக செயலாற்றிக் கொண்டு இருக்கின்ற முற்போக்கு இயக்கங்களை குறி வைத்து தாக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பதாக தெரியவருகிறது.

மேலும் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பயிற்சி நடைபெறுவதை அறிந்து கடந்த 30.09.22 ஆம் தேதி காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புகார் மனு விசாரிக்கப்பட்டு உடனடியாக பயிற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

இதில் தங்கள் அமைப்புக்கு எதிராக மக்கள் மன்றம் செயல்படுவதாக எண்ணிக்கொண்டு மக்கள் மன்றத்தின் முன்னனி பொறுப்பாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த திட்டமிட்டு அதை செயல்படுத்தும் நோக்கத்துடன் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சமூக விரோத சக்திகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் காஞ்சி மக்கள் மன்ற அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ள மங்களபாடி பகுதியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆகவே முற்போக்கு இயக்கங்களாக இருக்கின்ற அனைத்து இயக்கங்களுக்கும், குறிப்பாக ஜனநாயகத்துடன் செயல்பட்டு வருகின்ற காஞ்சி மக்கள் மன்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ள தோழர் மகேஷ் மற்றும் அவருடன் இயங்கும் முன்னணி பொறுப்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி தரும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் செஞ்சுடர், அப்புன், மகா, மேகலா, வித்தகவேந்தன் மற்றும் பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்