வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாணம் பிரம்மோற்சவம்
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில்
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பல சைவ வைணவ திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இது மட்டுமில்லாத பல்வேறு பரிகார தளங்களும் அமைந்துள்ளதால் நாள்தோறும் வெளி மாநில மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் காஞ்சிபுரம் வருகை புரிந்து தங்கள் நேர்த்திக் கடனையும் குறைகளையும் தெரிவித்து வேண்டுதல் நிறைவேற்றுவது வழக்கம்.
முக்தி தரும் தளங்கள் ஏழினுள் முதன்மையானது காஞ்சி என்பர். அக்காஞ்சி மாநகரத்தில் 16 செல்வங்கள் சிவலிங்கங்களாக உருவெடுத்து சோடஸலிங்க மூர்த்தியாக விளங்குகிறது.
அதில் ஒன்றான , காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு மருகுவார்குழலி உடனுறை அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பாராசரேசர் திருக்கோயில். நம் குறைகளை தீர்க்கும் கற்கள் 9 நவரத்தினங்கள் அவைகளை நாம் ஆபரணங்களாக அணிந்து கொண்டால் குறைகளை தீர்த்து நிறைகள் உண்டாக்கும் என்பர்.
காஞ்சியில் உள்ள அற்புதங்கள் வழக்குகளை தீர்த்து வைக்கும் கல் மேடை இவ்வாறு இருந்ததாக வரலாறு கூறுகிறது. இதனால் வழக்குகளை கோரிக்கைகளாக தீர்த்து வைக்க வேண்டுதல் வைத்தால் அனைத்தையும் தீர்த்துவைப்பதுடன் அதன் செயலை மனதில் இருந்து நீக்கி அருள் பாதிப்பதாகவும் வரலாறு கூறுகிறது.
அவ்வகையான இத்திருக்கோயிலின் ஆணி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி முதல் 9 மணிக்குள் கடக லக்கினத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
சூரியபிரபை, பூத. வாகனம், நாகம் அதிகார நந்தி , மகா ரதம் என பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu