வைகாசி பிரம்மோற்சவம்: மோகினி அலங்காரத்தில் வைகுந்தம் பெருமாள் வீதியுலா
வைகாசி பிரம்மோற்சவ விழாவில் இன்று மோகினி அலங்காரத்தில் வைகுந்த பெருமாள் வீதி உலா வந்த போது.
கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றானது ஸ்ரீ கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோயில். இந்திய தொல்லியல் துறையும் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திருக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த நான்கு நாட்களாக பல்வேறு வாகனங்களில் எம்பெருமான் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அவ்வகையில் இன்று ஐந்தாம் நாள் மோகினி அலங்காரத்தில் வாகனத்தில் சிறப்பு திருமஞ்சனத்துக்கு பிறகு எழுந்தருளி பக்தர்களுக்கு கோபுர தரிசனம் அளித்தார். சிறப்பு தீபாரதனைக்கு பின் நான்கு ராஜ வீதியில் பல்லக்கில் எழுந்தருளி எதிரே நிலை கண்ணாடியில் தன் அழகை ரசித்தவாரே வலம் வந்தார்.
மோகினி அலங்காரத்தில் வெண்பட்டு உடையணிந்து, கையில் தங்க கிளி, மல்லி உள்ளிட்ட பலர் வண்ண மாலைகள் சூடி , கொண்டை மற்றும் ஜடை அலங்காரத்தில் ஓய்யாரமாக அமர்ந்துள்ள காட்சியை பக்தர்கள் கண்டு தரிசனம் மேற்கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu