காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 600 முகாம்களில் 31,008 பேருக்கு தடுப்பூசி செலுத்தல்
நடமாடும் தடுப்பூசி வாகனம் மூலம் அரசு தேர்வு தனியார் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சத்து 26 ஆயிரம் நபர்களில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் முதல் தவணையாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 638 நபர்களும் இரண்டாவது தவணையாக ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 430 நபர்களும் ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை தினசரி மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
இன்று காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 600 மையங்களில் 48ஆயிரம் நபர்களுக்கு செலுத்த திட்டமிட்டு மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடுதேடி தடுப்பூசி செலுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது .
மேலும் முதல் தவணை செலுத்தி கொண்ட நபர்கள் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள ஏதுவாக அவர்களின் விவரங்கள் அந்தந்த வட்டார மற்றும் நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
அவ்வகையில் 12 மணி நேர தொடர் சிறப்பு முகாமில் 31,008 நபர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இம்முகாம் சிறப்பாக செயல்பட பணியாற்றிய அனைத்து பணியாளர்களையும் மாவட்ட நிர்வாகம் பாராட்டியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu