காஞ்சிபுரம் பெருநகராட்சியில் ஓரே வாரத்தில் 17ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

காஞ்சிபுரம் பெருநகராட்சியில்  ஓரே வாரத்தில் 17ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
X

காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகம் (பைல் படம்)

காஞ்சிபுரம் பெருநகராட்சியில் ஒரே வாரத்தில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அறிவிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் ஆணையர் லட்சுமி மற்றும் நகர்நல அலுவலர் முத்து தலைமையில் 51வார்டுகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கல்லூரிகள் என நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது..

கடந்த 1ம்தேதி - 1562 . 2ம் தேதி 1800. 3ம்தேதி -2122. 4ம்தேதி -2871. 5ம்தேதி -1970. 6ம்தேதி - 2577. 7ம்தேதி -2221. 8ம் தேதி - 2051 என ஒரே வாரத்தில் 17 ஆயிரம் நபர்களுக்கு மேல் செலுத்தபட்டுள்ளதாக பெருநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் முதல் தவணை ஊசி செலுத்தியவர்களுக்கான இடைவெளி காலம் நெருங்குவதால் இரண்டாம் நிலை செலுத்த அதிகளவில் பொதுமக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.


Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil