காஞ்சிபுரத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி

காஞ்சிபுரத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி
X

சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்திற்கு வந்த விவசாயிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இதில் வேளாண்மை துறை சார்பில் மழையளவு , நடப்பு பருவ பயிர் , வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்படும்.

வேளாண்மை துறை சார்பில் விவசாய திட்டங்கள் மற்றும் கடன் பெறுதல் , மான்யம் உள்ளிட்டவை காணொலி மூலம் விளக்கப்படும். மேலும் விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினை வேளாண்மை துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டு பயனைடைவர்.

இந்நிலையில், இக்கூட்டத்திற்கு வரும் விவசாயிகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அவர்களுக்கு‌ பயன்பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட விவசாயிகள் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டை காண்பித்து முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் மூன்னிலையில் செலுத்தி கொண்டனர்.

இதன் பின் விவசாய நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!