தேர்தல் கமிஷன் தீர்ப்பு வரும் வரை நான் தான் அதிமுக மாவட்ட செயலர் ஆர்.வி. ரஞ்சித்குமார்
ஏபிஎஸ் அணி சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.வி.ரஞ்சித்குமார் அண்ணா , எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கடந்த ஒரு மாத காலமாகவே அண்ணா திமுகவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என பிளவுபட்டு தாங்கள்தான் உண்மையுள்ள அதிமுக என்ன மாறி மாறி கூறி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியின் கீழ் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட செயலாளர்களை அறிவித்து அறிக்கை வெளியிட்டார்.அதன்படி காஞ்சிபுரம் , உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கான மாவட்ட செயலாளராக முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆர்.வி.ரஞ்சித்குமார் என்பவர் நியமிக்கப்பட்டு செயல்படுவார் என அறிவித்தார்.
இந்நிலையில் இன்று புதியதாக மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.வி. ரஞ்சித்குமார் வாலாஜாபாத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தன் தொண்டர்கள் புடைசூழ மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை, சங்கரமடம் அருகில் உள்ள பெரியார் சிலை மற்றும் புதிய ரயில்வே நிலையம் அருகே முன்னாள் நகர கழக செயலாளரான புல்லட் பரிமளம் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆளுயர சிலைக்கு கிரேன் மூலம் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாலை அணிவிக்க வந்த அவருக்கு மேள தாளங்கள் மற்றும் வான வேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் மாமன்ற உறுப்பினருமான புல்லட் பரிமளம், மகளிரணியை சேர்ந்த கோமளவல்லி உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதன்பின் செய்தியாளரிடம் பேசுவையில், அதிமுகவைப் பொறுத்தவரை அதிகாரம் உள்ள ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்த மாவட்ட செயலாளர் என்ற முறையில் சிறப்பாக செயல்பட உள்ளதாகவும், அதிமுக நிர்வாகிகள் ஒருவரான முனுசாமி பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிச்சாமி தவறான வழிக்கு செல்வதாகவும் , தேர்தல் கமிஷன் அறிவிக்கும் வரை நான்தான் அதிமுகவின் மாவட்ட செயலாளர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 13,000 புதிய நிர்வாகிகளை விரைவில் ஓபிஎஸ் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.எடப்பாடி பழனிச்சாமி முறையாக பேசி அதிமுக பிளவை சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu