காஞ்சிபுரத்தில் ஒன்றிய அளவில் மாணவ, மாணவிகளுக்கான கலை திருவிழா போட்டி

காஞ்சிபுரத்தில் ஒன்றிய அளவில் மாணவ, மாணவிகளுக்கான கலை திருவிழா போட்டி
X

கலைத் திருவிழா துவக்க விழாவிற்கு  வந்த சிறப்பு விருந்தினர்களை அங்கம்பாக்கம் பள்ளி மாணவர்கள் புலிவேடம் அணிந்து வரவேற்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றிய அளவில் பள்ளி மாணவ , மாணவிகளுக்கான கலை திருவிழா போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர் மாணவிகளின் தனி திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கலை திருவிழா கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.


அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கலை திருவிழா பள்ளி அளவில் நடைபெற்று, அடுத்த கட்டமாக ஒன்றிய அளவில் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் ஒன்றியம் சார்பில் 54 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களது கலை திறமைகளை காட்டும் போட்டியை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதில் நடனம் ஓவியம் கோலாட்டம் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் தேர்வான மாணவ , மாணவிகள் மாவட்டம் , மாநில அளவிலான போட்டி என பங்கேற்பர்.


துவக்க விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் தமிழக பராம்பரிய கலை நடனங்கள் நடைபெற்றதை விருந்தினர்கள் கண்டு மகிழ்ந்தனர். துவக்க விழா நிகழ்ச்சியில் மாணவர் காவல் படையினர் சிறப்பு விருந்தினருக்கு காவல் சீருடையுடன் மரியாதை அளித்ததும், அங்கம்பாக்கம் பள்ளி மாணவர்கள் புலி வேஷம் அணிந்து விருந்தினர்களை வரவேற்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் , மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஓன்றிய குழு துணை தலைவர் திவ்யப்பிரியா இளமது, திமுக ஓன்றிய செயலாளர் குமார் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story