இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: இருவர் உயிரிழப்பு

பைல் படம்
காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் எதிர் எதிரே சென்ற இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானது. இச்சம்பவத்தில் இருவர் பலியானார் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(45).இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியை அடுத்த நத்தப்பேட்டை பகுதியில் மெக்கானிக் செட் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் ஒரு லாரி பழுதாகி நின்றிருந்த லாரியை பழுது பார்க்க தனது உடன் பணிபுரியும் சதிஷ்(17)என்பவரும் சென்று பழுது நீக்கம் செய்துவிட்டு மீண்டும் காஞ்சிபுரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது எதிர் திசையில் காஞ்சிபுரத்திலிருந்து குருவிமலையிலுள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த AC மெக்கானிக் யோகமூர்த்தி என்பவரது APACHE இருசக்கர வாகனமும் ஆனந்தன் வந்த Passion இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆனந்தன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலே துடிதுடிக்க பலியானார். இதனையெடுத்து ஆபத்தான நிலையிலிருந்த எதிர் திசையில் வந்த மூர்த்தி தலையில் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதே போல் ஆனந்தன் உடன் வந்த மெக்கானிக் சதிஷ்க்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததையெடுத்து மருத்துவமனையில் இவரது உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து, உடற்கூறு ஆய்வுக்காக பிரேதங்களை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து இந்த கால இளைஞர்கள் சிறிதும் அச்சம் கொள்வதில்லை என இந்த விபத்தை பார்த்த பலர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu