போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த சாம்சங் ஊழியர்கள் இருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த ஒரு மாத காலமாக ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் 8 மணி நேர பணி என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள்வந்து கொண்டிருந்த பொழுது சாம்சங் நிறுவனம் அருகே டாட்டா ஏசி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்பொழுது 13 சாம்சங் ஊழியர்கள் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் நான்கு பேர் சவிதா மருத்துவமனையிலும் ஐந்து பேர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையிலும் மீதமுள்ளோர் சிறிய காயங்கள் முதலுதவி பெற்று வீடு திரும்பினர்.
அப்பொழுது இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த எஸ்எஸ்ஐ மணிகண்டனை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சாம்சங் ஊழியர்கள் எல்லன், சூரியபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இன்று காலை இருவரையும் கைது செய்து சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அப்பொழுது ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டது தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu