காரின் ரகசிய அறையில் வைத்து கஞ்சா கடத்திய இருவர் கைது

காரின் ரகசிய அறையில் வைத்து  கஞ்சா கடத்திய இருவர் கைது
X

காஞ்சிபுரம் அருகே கஞ்சா காரில் கடத்தியதாக கைது செய்யப்பட்ட  இருவர்

Two arrested for smuggling cannabis

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை கீழம்பி பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த டாடா சுமோவை மடக்கி சோதனையில் ஈடுட்டனர். காரில் ரகசிய அறை அமைத்து அதில் 60கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்தனர்.

காரில் வந்த இருவரை விசாரணை மேற்கொண்டதில் , ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் பாண்டீஸ்வரன் என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா பறிமுதல் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் போதை பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

படவிளக்கம் : ஆந்திராவில் இருந்து காஞ்சிபுரம் வழியாக கஞ்சா கடத்தி சென்ற கார் மற்றும் இருவரை கைது செய்த போது

Tags

Next Story