சிக்கலில் சிக்கிய செல்வவிநாயகர் கோயில்..!

சிக்கலில்  சிக்கிய செல்வவிநாயகர் கோயில்..!
X

கோட்ராம்பாளையம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்.

காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெரு, நாகாலுத்து தெரு சந்திப்பில் 50 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் மற்றும் அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற சைவ வைணவ திருத்தலங்கள் மட்டுமல்லாது பல்வேறு கிராமப்புற பகுதிகளிலும் உள்ள திருக்கோயில்கள் பரிகாரத் தலங்களாகும் திவ்ய தேசங்களாகவும் அமைந்துள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள கோட்ராம்பாளையம் தெரு மற்றும் நாகலத்துமேடு இணைப்பு பகுதியில் பழமையான ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் அம்மன் கோயில் அமைந்துள்ளன.

இந்த திருக்கோயிலின் வலது மற்றும் இடது புறங்களில் பல்வேறு வளர்ச்சி பகுதிகளும் குடியிருப்பு பகுதிகளும் ஏராளமாக அமைந்து தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

பிரச்சனைக்கு உள்ள திருக்கோயிலை பார்வையிட்ட பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட திருக்கோயில் பக்தர்கள்

பழமையான இந்த திருக்கோயிலில் மீண்டும் கும்பாபிஷேக பணிக்காக பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில் வரும் 30ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக துண்டு பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் , திருக்கோயிலின் முகப்பு பகுதியில் உள்ள ஷீட்டுகளை இரு தினங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட போது கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளக் கூடாது எனவும், சாலைகள் குறுகலாக உள்ளதால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அவ்வழியில் செல்ல இயலாத நிலையில் மீண்டும் கோவிலை முன் பகுதியில் கட்டுமான பணிகள் கட்ட வேண்டாம் என சிலர் தடுத்துள்ளனர்.

இதுகுறித்து இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் தெரிவித்து அதன் பின் சமரசம் ஏற்பட்ட பின் பணிகள் தொடர்ந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சிலர் தூண்டுதல் பெயரில் இந்த தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஒரு தரப்பினரும், அவசர காலங்களில் அவசர ஊர்தி மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல இயலாத நிலையில் இருப்பதால் இதனை நீட்டிக்க வேண்டாம் என கூறுவதாகும் தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலமாக அந்த சாலையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் எந்த ஒரு இடையூறும் இல்லை என கூறுவதும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், இந்நிலையில் திருக்கோயிலை அகற்றும் செயலை கண்டித்த பக்தர்கள் இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் பால் ஸ்ரீதரிடம் முறையிட்டுள்ள நிலையில், அப்பகுதியை பார்வையிட்டு அதற்கான தடுப்பு நடவடிக்கையை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக இருந்த விநாயகர் கும்பாபிஷேக பணி நடைபெற இன்னும் ஓரிரு வாரங்கள் உள்ள நிலையில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story