மது கடத்தலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர் கைது!
பாண்டிச்சேரியிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட மது பாட்டிலுடன் அரசு போக்குவரத்து ஓட்டுநர் இம்மானுவேல்.
தமிழகத்தில கள்ளக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலை பின்பு தமிழகம் முழுதும் காவல்துறை கள்ள சாராயம் மற்றும் அரசு மதுபானங்களை வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது என பலவற்றில் ஈடுபடுவதை சோதனையில் கைப்பற்றி அதில் ஈடுபடுபவர்கள் மீது கடும் குற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு காவல்துறை கடந்த இரண்டு மாதங்களாகவே நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் தீடிர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் அரசு மதுபான கடைகளில் அரசு விதிகளை மீறி மது வாங்கி விற்போரை தொடர் கண்காணித்து வருகின்றனர்.
அவ்வகையில் கடந்த வாரம் உத்திரமேரூர் அருகே அரசு மதுபான கடைகளிலிருந்து கூடுதல் விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்து வந்த கருவேப்பூண்டி கிராமத்தை சேர்ந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று வாலாஜாபாத் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த ஷிப்ட் ரக காரை சோதனை இட்ட போது அதில் பாண்டிச்சேரியில் இருந்து 66 பல்வேறு வகையான முழு கொள்ளளவு கொண்ட பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்து அவரை கைது செய்து மேல் வசாரணை மேற்கொண்டனர்.
அவ் வசாரணையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பணிமனை இரண்டில் வேலூர் - தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருவதாகவும், அவருடைய சொந்த காரில் இன்று பாண்டிச்சேரியில் இருந்து எடுத்து வந்தது தெரிய வந்தது என் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசு போக்குவரத்து ஓட்டுநர் மதுக்கடத்தலில் ஈடுபட்டது சக போக்குவரத்து தொழிலாளர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu