காஞ்சிபுரத்தில் 13 பள்ளிகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை :மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரத்தில்  13 பள்ளிகளுக்கு நாளை  சிறப்பு விடுமுறை :மாவட்ட ஆட்சியர்

நாளை கச்சபேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை ஒட்டி மின் அலங்காரத்தில் ராஜகோபுரம்.

Tomorrow 13 School Special Leave காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி அப்பகுதியைச் சுற்றியுள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tomorrow 13 School Special Leave

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு பரிகார தலங்களும், வைணவ திவ்ய தேசங்களும், புகழ்பெற்ற சைவ திருக்கோயில்களும் உள்ள நிலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனத்திற்காக காஞ்சிபுரம் வருகை புரிகின்றனர்.

மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு திருக்கோயில்களில் தற்போது திருப்பணி நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்று வருகிறது.அவ்வகையில் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்து தற்போது நிறைவு பெற்றுள்ளது.

Tomorrow 13 School Special Leave


மகா கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை.

இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் 33 யாக சாலைகள் அமைக்கப்பட்டு 160 சிவாச்சாரியார்களால் பல்வேறு காலநிலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் குடமுழுக்கு விழாவுக்கான அனைத்து பணிகளையும் நிர்வாக குழு செய்து வரும் நிலையில் நேற்று அதனை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்டு குடமுழக்கு விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித நெரிசலும் இன்றி சாமி தரிசனம் மேற்கொள்ளவும் விழா பார்க்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மேலும் இத்திருக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், இக்கோயிலைச் சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள 1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி, 2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3.அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம், 4.அந்திரசன் பள்ளி, 5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி. 6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி. 7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. 8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி மற்றும் 9. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள். 10.ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி இருந்தார்.

இதனைக் கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை மேற்படி பள்ளிகளுக்கு 01.02.2024 அன்று மேற்படி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story