பட்டா பதிவேற்றம் செய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

பட்டா பதிவேற்றம் செய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
X

ரூபாய் 15,000 லஞ்சம் வாங்கி சிக்கிக் கண்ட கிராம நிர்வாக அதிகாரி கருணாகரன்

கிராம கணக்கு புத்தகத்தில் பட்டா பதிவேற்றம் செய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கிராம கணக்குப்பதிவேட்டில் பாட்டாவை பதிவேற்றம் செய்து தர லஞ்சம் வாங்கிய திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடலை சேர்ந்தவர் குமரவேல்.இவருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மாவட்ட கலெக்டர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா கிராம கணக்கு பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், பட்டாவினை பதிவேற்றம் செய்ய திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை அணுகியுள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் பட்டாவினை பதிவேற்றம் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் இறுதியாக 15,000 ரூபாய் தர உறுதி செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம் தருவதற்கு மனம் இல்லாத நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அலுவலகத்தில் குமரவேல் புகார் தெரிவித்துள்ளார்.


அதன் அடிப்படையில் இன்று திருமுக்கூடல் சாலவாக்கம் சாலையில் அருங்குன்றம் அருகே குமரவேலை வர சொல்லி கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் லஞ்ச பணத்தை பெற்ற போது, அங்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா தலைமையிலான குழுவினர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் திருமுக்கூடல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பட்டா பதிவேற்றம் செய்து தர லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!