காஞ்சிபுரம் மாநகராட்சியில் த.மா.கா. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் த.மா.கா. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
X

மௌலி சசிகுமார் 10 வார்டு பதவிக்கும், எம்.கவிதா 15 வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இரு பெண் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, மாங்காடு குன்றத்தூர் நகராட்சிகளும், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த அலுவலகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று வரை மொத்தம் 43 வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில் இன்று காலை மீண்டும் வேட்புமனு தாக்கல் துவங்கியது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் அதிமுக 45 இடங்களிலும், தமிழ் மாநில காங்கிரஸ் மூன்று இடங்களில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் மௌலி சசிகுமார் 10 வார்டு பதவிக்கும், எம்.கவிதா 15 வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்புமனு தாக்கலின் போது தமாகா மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன், மாநில இளைஞரணி துணை பொது செயலாளர் சங்கர், சசிகுமார், சுகுமார், தென்னவன் வழக்கறிஞர் சுதர்சன் புறம்பயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி