காஞ்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது: 62 சவரன் பறிமுதல்

காஞ்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது: 62 சவரன் பறிமுதல்
X

காஞ்சிபுரம் கண்ணப்பன் தெருவில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குணசேகரன் சிவவிநாயகம், ராஜன்.

காஞ்சிபுரம் கண்ணப்பன் தெருவில் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வீட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு 62 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கண்ணப்பன் தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவர் ரங்கசாமி குளம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 100 சவரன் தங்க நகை , 5 கிலோ வெள்ளி மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்து இதுகுறித்து விஷ்ணுகாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாந்தாராம் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தனிப்படை அமைத்தனர்.

தனிப்படை மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தினர் அப்பகுதியில் சுற்றியுள்ள 150 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சந்தேகத்தின் பேரில் காஞ்சிபுரம் , ஓரிக்கை பகுதியை சேர்ந்த முன்னாள் பாலியல் குற்றவாளி குணா(26) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறை விசாரணையில் குணா சென்னையை சேர்ந்த ராஜன்(47), சஇவவஇநஆயகம் ஆகிய இரு நபர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் உள்ள கிணற்றில் போட்டு வைத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை குற்றவாளிகளுடன் வெம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிணற்றில் தீயணைப்பு துறை உதவியுடன், கிணற்றிலிருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 62 சவரன் என தெரிய வந்துள்ளது. மேலும் 1கிலோ கவரிங் நகைகள் மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி 3 நபர்களையும் துரிதமாக கைது செய்த டிஎஸ்பி ஜூலியஸ் சீசர், ஆய்வாளர் பரந்தாமன் ஆகியோரை எஸ் பி சுதாகர் பாராட்டினார்.

Tags

Next Story
why is ai important to the future