திமுக வை அழிக்க நினைப்பவர்கள் கடந்த கால வரலாறு தெரிந்து கொள்ளவேண்டும் - ஆர் எஸ் பாரதி

திமுக வை அழிக்க நினைப்பவர்கள் கடந்த கால வரலாறு தெரிந்து கொள்ளவேண்டும் - ஆர் எஸ் பாரதி
X

சாலவாக்கத்தில் நடைபெற்ற திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நலத்தட்ட உதவிகள் வழங்கிய அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மாவட்ட செயலாளரும்,  உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர்,  ஒன்றிய செயலாளர் குமார்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சாலவாக்கம் ஒன்றியம் சார்பில் சாலவாக்கத்தில் மாபெரும் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திமுக ஆட்சியின் இரண்டரை ஆண்டு கால சாதனைகள், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தமிழக முழுவதும் கடந்த சில தினங்களாகவே நடைபெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது

அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது இக்கூட்டங்களில் கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சாதனை விளக்கவுரை நிகழ்த்தி வருகின்றனர் இதில் அமைச்சர்களும் கலந்து கொண்டு நிதிநிலை அறிக்கை குறித்து பொதுமக்களுக்கும் கழக தொண்டர்களுக்கும் விளக்கி கூறி வருகின்றனர்.

சாலவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் குமார் தலைமையில் சாலவாக்கம் பேருந்து நிலையம் அருகே சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நிதிநிலை விளக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர், கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு , நாளை பிறந்தநாள் காணும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் நீடூடி வாழ 71 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து , நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அனைவரும் திமுகவின் சாதனைகளை எடுத்துரைத்தனர். இதில் சிறப்பு பேருரை ஆற்றிய கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, கடந்த சில தினங்களுக்கு முன் முன்பு பாரத பிரதமர் தமிழகம் வருகையின் போது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுகவை வேரோடு அழிப்பதாக கூறினார்.

கடந்த காலங்களில் தேர்தலுக்கு முன்பு இது போன்று கூறிய அனைவரும் அந்த தேர்தல்களில் படு தோல்வியை அடைந்ததும் தற்போது இதை மோடி கூறி வருவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்று தமிழகம் போல், இந்தியா முழுவதும் சிறப்பான ஆட்சி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் பிறந்தநாள் பரிசாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று அவருக்கு அளிக்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி தலைவர் சசிகுமார், உத்திரமேரூர் நகர செயலாளர் பாரிவள்ளல் , சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா, கிளைக் கழக செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட சாலவாக்க ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் பல லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!