மக்கள் குறைதீர்க்கும் கூட்ட நாளில் அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்கள் கூடாது
கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த பொதுமக்கள் ( கோப்பு படம்)
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறுவது வழக்கம்.
இந்நாளில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று உரிய அலுவலருக்கு அதனை பரிந்துரை செய்து வழங்குவது வழக்கம். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடும்ப அட்டை பட்டா மாற்றம் வங்கி கடன் விவசாய நலன் சார்ந்த கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பது வழக்கம்.
மேலும் ஊராட்சி கிராம மக்கள் குழுவாக வந்து தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியருக்கு நேரில் தெரிவித்து அதனை நிறைவேற்ற கோரிக்கை வைப்பர்.
சிலர் தங்களது கோரிக்கைகள் அதிகாரி அளவில் காலதாமதம் ஏற்படுவதை சுட்டிக்காட்டியும் பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்து செல்வது வழக்கம்.
இதன் மூலம் வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே நேரடியாக ஆட்சியரை சந்திக்கும் நிலையும் இருந்தது. பிற நாட்களில் ஆட்சியரின் அலுவலக பணிகள் காரணமாக சில நேரங்களில் பொதுமக்களை சந்திக்க இயலாத நிலையும் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் திங்கட்கிழமைகளில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சியும் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெறுவார். மேலும் பொது மக்களுக்கான முகாம்கள் நல திட்ட உதவிகள் என அனைத்தும் திங்கட்கிழமையில் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிய வந்துள்ள உள்ள நிலையில் நாளை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் யார் தலைமையில் நடைபெறும் ? அமைச்சர் நிகழ்வு என்பதால் துறை சார்ந்த அதிகாரிகளும் அங்கு செல்ல வேண்டிய நிலையில் உருவாகுவதால் இனி வரும் காலத்தில் இதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வெகுவாக எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu