பாஜக பற்றி பேசுவதற்கு செல்வப்பெருந்தகைக்கு அருகதை இல்லை - எச்.ராஜா

பாஜக பற்றி பேசுவதற்கு செல்வப்பெருந்தகைக்கு அருகதை இல்லை - எச்.ராஜா
X

பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா காஞ்சிபுரம் சங்கரமடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

பாஜக பற்றி பேசுவதற்கு செல்வப்பெருந்தகைக்கு அருகதை இல்லை என காஞ்சிபுரத்தில் அளித்த பேட்டியில் எச்.ராஜா கூறினார்.

கொள்கை பிடிப்பு இல்லாத செல்வப் பெருந்தகை பாஜக பற்றி பேச அருகதை இல்லை எனவும், பேச முயற்சித்தால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டிய வரும் என்பதால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமென எச். ராஜா காஞ்சிபுரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்..

பாஜக முன்னாள் தேசிய செயலாளரும், மூத்த நிர்வாகியான எச் ராஜா காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு இன்று மாலை வருகை புரிந்தார். சங்கர மட மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து இருபது நிமிடம் தனிமையில் இருவரும் சந்தித்து உரையாடினார்கள்.

அதனைத் தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.

அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா , பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறி வருவது தவறானது என்றும் பாமகவின் வாக்குகளே அதன் வாக்கு சதவீதத்துக்கு உயர்வு என காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்து கேட்டதற்கு, செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் பயணித்து தற்போது காங்கிரஸில் உள்ளதாகவும், பாஜக பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை எனவும், மீறி பேசினால் அவருடைய பல்வேறு பின்புலங்களை ஆராய வேண்டியிருக்கும் எனவும், ஆகவே வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வின் போது பாஜக மாநில நிர்வாகி டால்பின் ஸ்ரீதர், மாநில பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அணி துணைத்தலைவர் கணேஷ், பாஜக நிர்வாகிகள் ஜீவானந்தம், ஓம் சக்தி பெருமாள் , மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!