காஞ்சிபுரத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு; தூய்மை பணிகள் தீவிரம்

காஞ்சிபுரத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு;  தூய்மை பணிகள் தீவிரம்
X

திரையரங்குகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள்.

காஞ்சிபுரத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதால் தூய்மை பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது.

மெல்ல மெல்ல பரவல் குறைவு காரணமாக அவ்வப்போது புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்து அதன்படி வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

அவ்வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் பொதுமக்கள் பீச் , உயிரியல் பூங்காக்கள் மற்றும் கேளிக்கை பகுதிகளில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

நீண்ட நாட்களாக திரை அரங்குகள் மூடியிருந்த நிலையில் தற்போது 50 சதவீத பார்வையாளர்களுடன் நாளை முதல் செயல்படலாம் என அறிவித்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் தூய்மை பணிகளை காலை முதலே ஊழியர்கள் தொடங்கி தொடர்ந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து திரையரங்கு முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு இருக்கைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.

வழிகாட்டு நெறிமுறைப்படி ஒரு இருக்கைக்கும் மற்றொரு கைக்கு எட்டும் நடுவில் இடைவெளியை விட்டு எச்சரிக்கை சீட்டு ஒட்டப்பட்டுள்ளது. நாளை முதல் பார்வையாளர்களுக்கு கிருமிநாசினி கொடுத்து வெப்பமானி மூலம் வெப்ப பரிசோதனைக்கு பின் முகக்கவசத்துடன் அனுமதிக்கப்படுவர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!