முறையாக வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரி வாலிபர் டவரில் ஏறி போராட்டம்..

முறையாக வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரி வாலிபர் டவரில் ஏறி போராட்டம்..
X

மணல் கடத்தலை தடுக்க முயன்றதால் தனது குடும்பத்தினரை தாக்கிய நபர்களை முறையாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து செல்போன் டவரில் ஏறி அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் பெருமாள்.

பெரும்பாக்கம் அருகே மணல் கடத்தலை தடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை முறையாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை.

மணல் திருட்டை தடுக்க கோரிய நபர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் உரிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி பிஎஸ்என்எல் டவரில் ஏறி வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் பேச்சுவார்த்தை ஈடுபட்டதால் பத்திரமாக மீட்கபட்டார்.

காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவருக்கு சொந்தமான நிலம் பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது.


இந்நிலையில், முத்துவேடு பெரும்பாக்கம் பகுதியில் ஆற்றுப்படுகையில் உள்ளதால் அங்கு மணல் திருட்டு நடப்பதாகவும் பெருமாள் என்பவருடைய நிலமழியாக மணல் திருட்டு நடைபெறுவதால் இதனை பெருமாள் மற்றும் அவரது தம்பி வெங்கடேஷ், தாய் மற்றும் தங்கை உள்ளிட்டோரை மணல் திருட்டு கும்பல் சரமாரியாக தாக்கி பெருமாள் மீது அரிவாள் வெட்டு மற்றும் அவரது தம்பி வெங்கடேசன் மீது சரமாரியான தாக்குதல் நடத்தியதால் அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பாலுசெட்டி காவல் நிலையத்தினர் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயியான தங்கள் மீது பொய் புகார் பதிவு செய்வதும், நாங்கள் குறிப்பிட்ட நபர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்தி வருகிறது என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக செல்போன் டவரில் ஏறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


அவரை சமாதானப்படுத்தி உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி தீயணைப்பு துறையினர் மற்றும் ஏ டி எஸ் பி சாம்சன் துரை, ஆய்வாளர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு அவரது தாய் சகோதரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் அவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு 108 அவசர ஊர்தி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் இச்சம்பவம் வெறும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா