பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ விஜயயேந்திரர்

பொதுமக்கள்  ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ விஜயயேந்திரர்
X

பாலாற்றில் கரையில் நடைபெற்ற சிறப்பு ஆரத்தி நிகழ்வில் பங்கேற்ற ஸ்ரீ விஜயேந்திரர். 

நதிகளை அரசுடன் இணைந்து பொதுமக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஸ்ரீ விஜயேந்திரர் வேண்டுகோள் விடுத்தார்.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ளது மகா பெரியவா அழைக்கபடும் ஸ்ரீ சந்திரசேகர சங்கராச்சாரியார் மணி மண்டபம். இதனையொட்டி பாலாறு செல்கிறது.

தற்போது துலாம் மாதம் நடைபெறுவதால் கங்கை நதியில் ஆரத்தி நிகழ்வு போல் இன்று மாலை நடைபெற்றது.

இந்நிலையில் ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்று ஸ்ரீமகா பெரியவர் திருவுருவ சிலையை பாலாற்றில் வைத்து பாலாற்றுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மலர்தூவி மாக் தீப ஆரத்தி நடைபெற்றது.

அதன் அகல்விளக்கு ஏற்றி பாலாற்றில் வழிபாட்டை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய போது , மரங்கள் , ஆறுகள் மற்றவர்களுக்கு உதவுவது போல் நாமும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

வடநாட்டில் கங்கா யமுனா போன்ற புண்ணிய நதிகளில் தூய்மையாக வைத்திருப்பது போல் நாமும் தென் நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் அரசுடன் இணைந்து பொதுமக்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இதனால் விவசாயமும் செழிக்கும் அதை பராமரிக்கும் நமது மனநிலையும், மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வழிவகுக்கும். நீர் நிலைகளை பாதுகாக்க அதற்கு வழிபாடு செய்து வாழ்வில் வளம் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.தூய்மை , தாய்மை , வாய்மை ஆகிய மூன்றையும் கடைபிடிக்க வேண்டும்

இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வேத விற்பனர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்