ஆசிரியைகளை ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட பேராசிரியர் பணியிடை நீக்கம்

ஆசிரியைகளை ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட பேராசிரியர் பணியிடை நீக்கம்
X

ஆசிரியைகளை ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட பேராசிரியர் மீது  காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த களியாம்பூண்டி பகுதியில் ஆசிரியைகளை ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெண் ஆசிரியர்களை ஆபாசமாக பேசி வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்ட களியாம்பூண்டி ஆசிரியர் பயிற்சி பள்ளி பேராசிரியர் கந்தவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெண்களை ஆபாசமாக பேசியவரை கைது செய்ய வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டது.

குழந்தைகளின் கற்றல் திறன் மூலம் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் எனும் திட்டம் உருவாக்கப்பட்டது.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி இதற்காக சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ஐந்து வட்டங்களில் இருந்து 40 ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்று செவிலிமேடு பகுதியில் நடைபெற்றது.

இவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தை சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டனர்.


இதில் களியாம்பூண்டி பகுதியில் செயல்படும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி நிறுவனத்தின் பேராசிரியர் கந்தவேல் என்பவர் பெண் ஆசிரியர்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் தெரிவித்த நிலையில் , இன்று மையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாட்ஸ் அப் குழுவில் பெண் ஆசிரியர்களை இழிவாக பேசி ஆடியோவும் வெளியிட்டுள்ளார்.

இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் நிலையில் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் இது குறித்து பயிற்சி மையத்தில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு கல்வி இயக்குனருக்கு அறிக்கை சமர்ப்பித்தன் விளைவாக இந்த கந்தவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் இன்று முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை வலுவாக இருக்க வேண்டும் எனவும், பெண் ஆசிரியர்களை இழிவாக பேசி ஆடியோ வெளியிட்ட அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

பெண் ஆசிரியர்களை ஆபாசமாக பேசி வெளியிட்ட ஆடியோ ஆசிரியர்கள் குழுவில் வேகமாக பரவியும் தற்போது சமூக வலைதளத்திற்கும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!