உபரி நீர் செல்லும் கால்வாய் சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலை துறை தீவிரம்
காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் பிற மாவட்ட ஏரிகளில் இருந்து உபரி நீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தொடர் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது பணிகள் பல துறைகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நீர் வள ஆதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகள் இந்த பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த மாதம் காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் பிரதான சாலை ஓரம் உள்ள கால்வாய்களில் உள்ள மணல்கள், கழிவுகள் அகற்றும் பணி 10 நாட்களாக நடைபெற்று அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது நெடுஞ்சாலை துறையினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒட்டி உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் பகுதிகளான வெம்பாக்கம் , வெள்ளகுளம், வெங்களத்தூர் ஆகிய பகுதிகளில் பெய்யும் கனமழையால் அப்பகுதி ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கோளிவாக்கம் பகுதியில் , காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம்- வெம்பாக்கம் சாலையில் 4 சிறு பாலங்கள் அமைந்துள்ளது. இதன் வழியாக நீர் சென்று கோளிவாக்கம் ஏரி நிரம்பி அதன் பின் அதன் உபரி நீர் அனைத்தும் பாலாற்றில் கலக்கும் வகையில் கால்வாய்கள் அமைந்துள்ளது.
இதனை சீரமைக்கும் பணியில் தற்போது நெடுஞ்சாலைத் துறையினர் மூன்று ஜேசிபி வாகனங்கள் மற்றும் 10 ஊழியர்கள் கொண்டு பணிகளை துவக்கி சீரமைத்து வருகின்றனர். 2 கீ.மீ தூரம் இப்பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பணிகள் மூலம் வடகிழக்கு பருவமழையின் போது நீர் தங்கு தடையின்றி கால்வாய்களில் செல்லும் வகையில் இப்பணிகள் உதவும் என்பதாலும் , பாலாற்றில் நீர் ஆதாரம் பெருக இப்பணி உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu