பொதுமக்களுக்கு இடையூறு அளித்த குரங்குகளை பிடித்த வனத்துறையினர்

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகளை பிடித்த வனத்துறையினர்.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் அதிக அளவில் குரங்கின் இனப்பெருக்கம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக காஞ்சிபுரம் அடுத்த களியனூர், ஆர்ப்பாக்கம், மாகரல் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகிறது. இவை பொது மக்களின் வீடுகளில் புகுந்து உணவுப் பொருட்களை சூறையாடுவது, வீட்டு கூரைகளை சேதப்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
இந்தியன் 2 ரிலீஸ்! படம் பாக்க முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சிட்டு போங்க..!
மேலும் இதை வனத்துறையினர் பிடித்து காப்பு காடுகளில் விடக்கோரி பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் மனுநீதி நாள் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மனு அளித்து நடவடிக்கை எடுக்க புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் அடுத்த களியனூர் ஊராட்சியில் அதிக அளவில் பொதுமக்களை அச்சுறுத்துறுவதாக ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி வனத்துறை ரேஞ்சரிடம் புகார் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக இப்பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று வனத்துறையினர் கூண்டுஅமைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவ்வகையில் ஒன்பது குரங்குகள் கூண்டிற்குள் சிக்கிய நிலையில் அதனை உத்தரமேரூர் அருகே உள்ள மலையாங்குளம் பகுதியில் உள்ள காப்பு காடுகளில் அதனை விடுவித்தனர்.
இவை விவசாய விளை நிலங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் தென்னை மரங்களில் உள்ள இளநீர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பெரும் கவலையற்ற நிலையில் இது போன்றே வனத்துறையினர் அதிக அளவில் கூண்டுகள் அமைத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.
இந்தியன் 2 படத்தில் யார் யார் நடித்திருக்கிறார்கள் தெரியுமா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu