செல்போன் வழிப்பறி நடந்த அரை மணி நேரத்தில் குற்றவாளிகள் வாகனத்துடன் கைது

காஞ்சிபுரம் அருகே வடமாநில இளைஞரிடம் செல்போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரு நிறுவன தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் பணி புரியும் தொழிலாளர்கள் பல்வேறு ஷிப்டுகளில் பணிபுரிந்து காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி உள்ளனர்.
தொழிற்சாலையில் தமிழ்நாடு மட்டுமல்ல அது வட மாநில தொழிலாளர்களும் பல ஆயிர கணக்கில் அங்கங்கே கிராமங்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் விபத்து மற்றும் மர்ம நபர்களால் வழி மறிக்கப்பட்டு தங்களது செல்போன் , பணம் , இருசக்கர வாகனம் என தமது உடைமைகளை இழுந்து , சில சமயம் தாக்குதலுக்கும் ஆளாகி வருவது தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கப்பா புருஷோத்தமன் என்பவர் நீர்வள்ளூர் பகுதியில் அமைந்துள்ள எல்.என்.டி. நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அருகில் உள்ள கிராமத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்துவிட்டு பத்தரை மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் செல்போன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
அதை மறுத்த வட மாநில வாலிபரை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கத்தியால் பலமாக தாக்கி வெட்டு காயங்கள் ஆக்கி செல்போன் , ரூ 2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர்.
பலத்த காயங்களுடன் வட மாநில வாலிபர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் , உதவி ஆய்வாளர் துளசி ஆகியோர் இது குறித்த தகவல்களை சக காவலர்களுக்கு பகிர்ந்து உடனடியாக விசாரணையை துவக்கி உள்ளனர்.
இந்நிலையில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேடல் பெட்ரோல் பங்க் அருகே பயிற்சி உதவி ஆய்வாளர் அருண் , தலைமை காவலர்கள் விஜய், வேஸ்லி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை மடக்கி சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.
மேலும் அவர்களது இருசக்கர வாகனத்தில் இருந்து 12 செல்போன்கள் மற்றும் தாக்குதலுக்காக வைத்திருந்த அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேல் விசாரணையை துவக்கினர்.
இதில் அவர்கள் மேட்டூர் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் ஆகியோர் என தெரிய வந்தது. மேலும் அவர்கள் வட மாநில இளைஞரிடம் செல்போன் பறித்த குற்றத்தை ஒத்துக்கொண்டனர். குற்றத்தை ஒப்புக் கொண்டதால் இவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனம் செல்போன் மற்றும் அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழிப்பறி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சம்பவம் நடைபெற்ற அரை மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற பின் குறைந்த நேரத்தில் விரைந்து கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரும் பாராட்டியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu