காஞ்சிபுரத்தில் மக்கள் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் மூடல்: ஆட்சியர் அதிரடி
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி. ( கோப்பு படம்).
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நுகர்வோர் வாணிப கழகம் சார்பில் அரசு மதுபான கடைகள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளை அடக்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுக்கடைகளை மூட பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுமக்கள்கள் தங்கள் பகுதிகளில் செயல்படும் கடைகளை மூட வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கும் என அறிவித்திருந்த நிலையில், காஞ்சிபுரம் மிலிட்டரி சாலை - பெரியார் நகர் புறவழி சாலை பகுதியில் தேனம்பாக்கம், விஷ்ணு நகர் என்ற பகுதியில் அரசு மதுபான கடை எண் 4155 கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட நாள் முதலில் அந்த பகுதியில் உள்ள விஷ்ணு நகர் குடியிருப்பு வாசிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த கடை அருகே நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சங்கர மட திருக்கோயில் அமைந்துள்ளது.
இது மட்டுமில்லாமல் காஞ்சிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச் சாலை வழியாக பல்வேறு வாகனங்கள் செல்லும் நிலையில் மது பிரியர்கள் இதனால் வாகன விபத்தில் சிக்குவதாகவும் பொது மக்களுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதாக விஷ்ணு நகர் குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகி சுரேஷ் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டம், மற்றும் நகரம், விஷ்ணுநகர் தேனம்பாக்கம் என்ற முகவரியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண்.4155-கடையினை நிரந்தரமாக மூட கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்து வருவதாலும் அப்பகுதி செங்கல்பட்டு - காஞ்சிபுரம் புறவழிச்சாலையில் பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருவதாலும், இக்கடையினை வேறு இடத்திற்கு மாற்றம் செய்திட கோரி 21.10.2024 அன்று காஞ்சிபுரம் டாஸ்மாக் லிட் மாவட்ட மேலாளர் (தெற்கு) அறிக்கை சமர்ப்பித்துள்ளதாலும், அப்பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாரமரிக்கும் பொருட்டு மேற்படி டாஸ்மாக் கடை எண்.4055-ஐ 21.10.2024 இரவு முதல் முடிட இதன் மூலம் ஆணையிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu