தாமல் ஏரி நிரம்பி வெளியேறிறும் உபரி நீர் : குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்

தாமல் ஏரி நிரம்பி வெளியேறிறும் உபரி நீர் : குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்
X

தாமல் ஏரி நிரம்பி நீர் வெளியேறுகிறது. இதில் ஆனந்தமாக குளிக்கும் பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் ஏரி நிரம்பியது. உபரி நீர் வெளியேறிவருகிறது. இதில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது மிகப்பெரிய ஏரியான தாமல் ஏரி சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த ஏரிக்கு 4 மதகுகள் உள்ளன இதன் மூலம் தாமல் பாலுசெட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் பாசன வசதி பெற்று விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாதம் முதல் வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ள நீர் வர தொடங்கியது. இதை வீணாக்காமல் பொதுப்பணித் துறையினர் தாமல் ஏரிக்கு நீர் செல்லும் வகையில் வழிவகை செய்து ஏரிக்கு நீர் கொண்டு சென்றனர்.

இதனால் தாமல் ஏரி விரைவாக தனது கொள்ளளவை எட்டி கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது. நேற்று சித்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருக்கும் அணையிலிருந்து நீர் வெளியேற்ற படுவதாகவும் இதனால் காஞ்சிபுரம் மாவட்ட கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.

இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏரியில் கலங்கள் வழியே அதிக நீர் வெளியேறுவது சிறிய அருவி போலக் காணப்படுவதால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் என அதிகளவில் கூடி குடும்பத்துடன் குளித்து வருகின்றனர்.

இதில் தங்கள் குழந்தைகளையும் மகிழ்ச்சிக்காக அழைத்து வந்து நீராட செய்யும் நிலையில் கூட்ட நெரிசலில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை துணையுடன் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!