உத்தரமேரூர் அருகே 5 புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்த சுந்தர் எம்.எல்.ஏ

உத்தரமேரூர் அருகே 5 புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்த சுந்தர் எம்.எல்.ஏ
X

காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் புதிய மின்மாற்றி பயன்பாட்டினை துவக்கி வைத்த எம் எல் ஏ சுந்தர்.

உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் ஐந்து இடங்களில் ரூ 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது.

குறைந்த மின்னழுத்தத்தை போக்கும் வகையில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான 5 புதிய மின்மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அய்யம்பேட்டை , ஏகனாம்பேட்டை , பூசிவாக்கம் திம்மையம்பேட்டை , வெண்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் மின் பொருட்கள் சேதம் அடைவதாகும், மூத்த குடிமக்கள் வாழ்வதற்கு பெரும் சிரமமாக உள்ளதாக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அய்யம்பேட்டை மற்றும் வாலாஜாபாத் மின்வாரிய அலுவலர்கள் 63 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றிகளை மேற்கண்ட ஐந்து இடங்களை பொருத்தி பரிசோதனை முறையில் செயல்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஐந்து பகுதிகளிலும் பொருத்தப்பட்ட புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளருமான சேகர் , வாலாஜாபாத் மின்வாரிய உதவி மின் பொறியாளர் ஏழுமலை ஐயம்பேட்டை மின்வாரிய உதவி பொறியாளர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் லெனின் , மகேந்திரன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விக்டர் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மின் சாதனங்கள் அதிக பயன்பாட்டில் தற்போது வந்துள்ளதால் போதிய அளவு மின்சாரம் வீடுகளுக்கு கிடைக்காத நிலையில் தற்போது புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டதால் ஐந்து பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் சில புதிய விரிவாக்கப் பகுதிகளும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!