காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த திடீர் கனமழை.

காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த  திடீர் கனமழை.
X

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் கன மழை பெய்தது.

காலை முதல் மிதமான வெயில் வாட்டி வந்த நிலையில் , மதியம் 2 மணி அளவில் காஞ்சிபுரம் சுற்றுப்பகுதிகளில் கன மழை பெய்தது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திடீரென பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

கடந்த மூன்று நாட்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அவ்வகையில் இன்று காலை முதலே மிதமான வெயில் சூழ்நிலை நிலவி வந்த நிலையில் திடீரென இரண்டு மணி அளவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான வாலாஜாபாத் , சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உத்திரமேரூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து திடீரென கனமழை பெய்ய துவங்கியது.

20 நிமிடங்களுக்கு மேலாக பெய்த கனமழையால் சாலையில் நீர் வழிந்து ஓடியது. வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி தஞ்சமடைந்தனர்.

திடீர் மழை மற்றும் குளிர்ந்த காற்று ஆகியற்றால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியுற்று வருகின்றனர்.

இதேபோல் உத்திரமேரூர் வாலாஜாபாத் பாலு செட்டி சத்திரம் சுங்குவார்சத்திரம் மற்றும் சாலவாக்கம் பகுதிகளிலும் கன மழை பெய்தது.

திடீர் மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுற்று வருகின்றனர். மேலும் விவசாயிகள் சிலர் நடவுப் பணிகளை மேற்கொண்டு உள்ள நிலையில் திடீர் மழை விவசாயிகளுக்கு சற்று தடையாக இருக்கும் என்பதால் சிறு அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil