அரசுப் பேருந்தில் சாகசங்கள் செய்யும் மாணவர்கள்: அச்சத்தை ஏற்படுத்தும் காட்சிகள்

அரசுப் பேருந்தில் சாகசங்கள் செய்யும் மாணவர்கள்: அச்சத்தை ஏற்படுத்தும் காட்சிகள்
X

காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்கள்.

பேருந்தில் பள்ளி மாணவர்களின் சாகச பயணம் அதிக மன உளைச்சலை அளிப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் கவலை.



தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதன்பிறகு கடந்த ஆண்டு மத்தியில் படிப்படியாக பரவல் குறைந்த காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர்களை அவமரியாதை செய்வதும் மற்றும் பொது வெளிகளில் சண்டையிட்டு கொள்வதும் என ஒழுங்கீனமாக நடந்து கொள்வது வீடியோ வெளியாகி ஆசிரியர் மட்டுமல்லாது கல்வி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தமிழக உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கினாலும் மாணவர்கள் தொடர்ந்து இச்செயலை மேற்கொண்டு வருவது வருத்தமளிக்கிறது. இந்நிலையில் இவர்களது பக்கம் தற்போது போக்குவரத்து ஊழியர் இடையே திரும்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பேருந்தில் உள்ளே வர சொன்ன போக்குவரத்து ஊழியரை மாணவர்கள் தாக்கியது போக்குவரத்து ஊழியர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மாலை காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் செல்லும் அரசுப் பேருந்தில் அதிக அளவில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் மேல் கூரையின் விளிம்புகளை பிடித்துக்கொண்டு நெடுநேரம் பயணம் செய்வது என பல சாகசங்களை நிகழ்த்தியது பயணிகளிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போக்குவரத்து ஊழியர் கூறுகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பள்ளி மாணவர்களின் இறுதி ஏற்றி செல்ல வேண்டும் என உள்ள நிலையில் பேருந்தின் உள்ளே வர மாணவர்கள் மறுந்து ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதும் சாகசம் என்ற பெயரில் உயிரை பணயம் வைத்து தொங்கி செல்வது வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

தற்போது சாலையில் பேருந்து ஓட்டுவதே பெருத்த சிரமம் உள்ள நிலையில், விபத்துக்கள் இன்றி ஓட்ட அதிகளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது எனவும், மாணவர்களின் ஒழுங்கீனம் அவர்களது பெற்றோரைக் காட்டிலும் தங்களுக்கு மன உளைச்சல் அதிகம் ஆகிறது என தெரிவிக்கின்றனர். ஏற்கனவே போக்குவரத்து துறையில் பெருத்த நட்டம் ஏற்பட்டு உதிரிபாகங்கள் மாற்ற இயலாத நிலையில் தற்போது பேருந்து இயக்கப்படும் நிலையில் இது போன்று உயிரை பணையம் வைத்துசாகசம் செய்வது எதற்காக ? என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!