காஞ்சிபுரம் : பள்ளி சென்ற மாணவன் மாயம், பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

காஞ்சிபுரம் : பள்ளி சென்ற மாணவன் மாயம், பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
X

பள்ளி மாணவன் மாயம் குறித்து விளக்கம் கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் 

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிக்கு சென்ற மாணவன் காணவில்லை, நிர்வாகம் அலட்சியம் காட்டியதால், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் , ஏகாம்பரநாதர் வடக்கு மாடவீதியை சேர்ந்த கூலி தொழிலாளிமுருகன், இவரது மனைவி சுந்தரி . இவர்களுக்கு கெளதமன் , புருஷோத் என இரு மகன்கள் உள்ளனர்.

இதில் புருஷோத் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக் கட்டணம் கட்டாததால் பள்ளிக்கு செல்ல மறுத்த நிலையில் இன்று பள்ளியில் இருந்து அழைப்பு வந்ததன் பேரில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளியில் இருந்து 10மணியளவில் வெளியே சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மதிய உணவு அளிக்க வந்த அவரது பெற்றோரிடம் 10மணிக்கே சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது முறையான பதில்கள் தெரிவிக்காத காரணத்தால் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தும் நடந்தவற்றை தெளிவுபடுத்தியுள்ளனர். பெற்றோர் தரப்பில் பள்ளி மாணவன் மாயம் குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளனர். இந்த சம்பவம் காஞ்சி புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!