திமுக கூட்டணியை சிறப்பாக வழிநடத்தும் ஸ்டாலின் - தொல்.திருமாவளவன்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் பவள விழாவில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்
காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் பவள விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் திமுக கூட்டணி கட்சிகளான விசிக காங்கிரஸ் மதிமுக உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அவ்வகையில் இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்த கூட்டணி திமுக காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது அல்ல என்றும் காவிரியை நீர் பிரச்சனைக்காக உருவாக்கி இன்று வரை பல தேர்தல்களில் வெற்றி கூட்டணியாக மாறி வருகிறது.
மேலும் பல மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் கூட்டணி உருவாகி அது சில காலத்துக்கு பிறகு காணாமல் போயிருக்கும். ஆனால் தமிழகத்தில் உள்ள கூட்டணி இன்றுவரை கட்டுக்கோப்புடன் ஒரே கொள்கையுடன் செயல்பட்டு அதனை திறமையாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் வழிநடத்தி திராவிடம் மாடல் ஆட்சி நடத்தி வருகிறார் எனவும், இனி வரும் காலங்களிலும் இது தொடரும் என தெரிவித்தார். திராவிட கழகம் அதனைத் தொடர்ந்து திமுக என இருட்டுக்குள் துப்பாக்கி போல் உள்ள இவர்களோடு இணைந்து மூன்றாவது குழலாக இருப்பேன் எனவும் தெரிவித்தார்.
இதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், வாரணாசியை தலைநகராக மாற்ற பாஜக முயல்வதாக தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில் , தமிழகத்தில் வலுவான கூட்டணியை உருவாக்கிய பெருமை ஸ்டாலினை சாரும் எனவும் இது பிற மாநிலங்களில் எடுத்துக்காட்டாக இக்கூட்டணி விளங்குகிறது என தெரிவித்தார்.
முத்தரசன் பேசுகையில், எதிர்க்கட்சிகளை இல்லாத வகையில் மாநிலங்களில் உருவாக்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது என தெரிவித்தார்.
திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் பேசுகையில், ஒரு காலத்தில் திமுக எல்லாம் ஒரு ஆளாய் என கூறிவந்த பாஜக தற்போது திமுக கேட்கிறது பாஜகவை எல்லாம் ஒரு கட்சியா என எண்ணும் வகையில் இந்த கூட்டணி செயல்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu