ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா பார்சலுடன் ஒடிசா மாநில வாலிபர் கைது!

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா பார்சலுடன் ஒடிசா மாநில வாலிபர்  கைது!
X

கஞ்சாவுடன் கைதான ஒடிசா வாலிபர்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் பைபாஸ் சாலையில் கஞ்சா கடத்திய ஒடிசா மாநில வாலிபர் கைதானார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பைபாஸ் சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனா். அப்போது வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீசாா் நிறுத்த முயன்றனா். ஆனால் அந்த கார், நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்துவ போலீசாா் வாகனத்தில் விரட்டி சென்று பிடித்தனா்.

அந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அதன் சீட்டிற்கு அடியில் ஒரு கிலோ கஞ்சா பாா்சல் இருந்தது. இதையடுத்து போலீசாா் வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அவருடைய பெயர் பிரசாந்த் குமார சுவாமி(28) என்பதும் தெரியவந்தது.

மேலும் இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவிலிருந்து வேலை தேடி சென்னை வந்து கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். தற்போதைய ஊரடங்கால் வேலை இழந்துள்ளாா். இதையடுத்து ஒடிசா வாலிபா் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டாா்.ஆந்திராவிலிருந்து இரு சக்கர வாகனத்திலேயே கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது.

இதையடுத்து போலீசாா் பிரசாந்த் குமாரசுவாமியை சுங்குவாா்சத்திரம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா். மேலும் கஞ்சா பாா்சல், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!