ஆன்மீக சுற்றுலா பேருந்தினை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்...!

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய திருத்தலங்களை தரிசிக்கும் வகையில் பயண அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் மண்டலம் சார்பாக ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா பேருந்தினை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தமிழக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்.

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் மட்டுமல்ல அது அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் பல பிரசித்தி பெற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ளது.

இந்நிலையில், பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையே திருக்கோயில்களை தரிசித்து வரும் நிலையை போக்கிட தமிழக அரசு ஆன்மீக சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.


அவ்வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் வரதராஜ பெருமாள் ஆலயம் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் ஏகாம்பரநாதர் ஆலயம் கோவிந்தவாடி குரு பகவான் ஆலயம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் தேவார சிவாலயமான திருவாளங்காடு வீரராகப் பெருமாள் ராமானுஜர் ஆலயம் என எட்டு திருத்தலங்களை ஒருங்கிணைந்து இந்த ஆன்மீக சுற்றுலா பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆன்மீக சுற்றுலா பேருந்தினை இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆன்மீக சுற்றுலா பேருந்தில் செல்ல நபர் ஒருவருக்கு 650 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பயன்பெற *www.tnstc.in* என்று இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் பயணிக்கும் நபருக்கு குடிநீர், தேநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்படும் காலை ஏழு மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மீண்டும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தடையும் வகையில் இந்த பயண திட்டம் அமைந்துள்ளது.


இந்தப் பேருந்துகளை துவக்கி வைத்து அமைச்சர் கூறுகையில் , ஆன்மீக பக்தர்கள் அனைவரும் அனைத்து திருக்கோயில்களை தரிசிக்கும் வகையில் தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாகும், இதில் பயன்பெறும் நபர்களின் எண்ணிக்கை பொறுத்து கூடுதல் பேருந்துகளும் இயக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்