காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களையும் பொருட்டு ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் முழுமையும் தீர்வு காணப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு கணிணி திருத்தம் முகாம் மற்றும் விரைவு நில உடைமை மேம்பாட்டுத் திட்டத் திருத்த அமர்வு ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமில்லாமல் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அனைத்து பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் திருநங்கைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக மேலும் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைவதற்கு ஏதுவாக பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெறும் முகாம் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் நாளை காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நாளை அளித்து பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu