அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மையத்துக்கு ஆம்புலன்ஸ் நன்கொடை.
காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மையத்திற்கு நன்கொடையாக அளித்த ஆம்புலன்சின் சாவியை தனியார் தொண்டு நிறுவனம் வழங்கியபோது
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ளது அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களும் பங்களாதேஷ் இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளிலும் இருந்து நோயாளிகள் புற்று நோய் சிகிச்சைக்காக இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் இந்தப் புற்றுநோய் மையத்தை உலகத்தரம் வாய்ந்த மையமாக உயர்த்த தமிழக அரசு சமீபத்தில் 100 கோடி ரூபாய் நிதி உதவி ஒதுக்கீடு செய்து அதிநவீன கருவிகள் மற்றும் மருத்துவ வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் செயல்பட உத்தரவிட்டது.
இந்நிலையில் மருத்துவர் உங்களுக்காக எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், தனியார் வங்கியான எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் இணைந்து 28 லட்சம் மதிப்பிலான அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் நன்கொடையாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மருத்துவமனை இயக்குனர் V.சீனிவாசன், நிலைய மருத்துவ அலுவலர் S. போகர் ஆகியோரிடம் தமிழ்நாடு நிர்வாகி அளித்தார்.
இந்த ஆம்புலன்சில் நோயாளிகளுக்குத் தேவையான செயற்கை சுவாச கருவி , ரத்த அழுத்தம் அளக்கும் கருவி, ஸ்பைனல் கார்ட் மானிட்டர் மற்றும் அவசர சிகிச்சை உபகரணங்கள் அனைத்தும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்சை பராமரிக்க செவிலியர் ஒருவர் மற்றும் உதவியாளர் இருவர் மற்றும் மருந்தாளுநர் என ஐந்து பேர் பணி நியமிக்கபட்டுள்ளனர். இந்த ஆம்புலன்ஸில் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் வாகனத்திலேயே கிடைக்கும் வகையில் பணியாற்ற மருத்துவமனை செவிலியரும், இணைந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu