காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் பாம்புகள் நடமாட்டம்.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இரு பாம்புகள் நடனமாடியது விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது
Kanchipuram District Sports Stadium-காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம். இம்மைதானத்தில்தான் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள், ராணுவம் மற்றும் காவல் துறையினருக்கான ஆட்கள் தேர்வுகளும் நடைபெறுவது வழக்கம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் இந்த விளையாட்டு அரங்கம் மிகவும் பழுதடைந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்ததின் தீவிர முயற்சியில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக புதுப்பிக்கப்பட்டது.
இந்த விளையாட்டு அரங்கில் கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால் இறகு பந்து, நீச்சல் குளம், டென்னிஸ் தடகளம், உள் விளையாட்டு அரங்கம் என பல விளையாட்டுகளுக்கான மைதானங்கள் அமைக்கப்பட்டது.
மேலும் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் பிரம்மாண்டமான பார்வையாளர் அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தின் உள் உடற்பயிற்சி கூடம் அதிநவீனமாக அமைக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சியும் மேற்கொள்ளும் வகையிலும், ஆண் பெண் இருபாலரும் உடைமாற்றும் அறை தனித்தனியாக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் விளையாட்டு வீரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து அதிக அளவில் பயிற்சிகள் மேற்கொள்வதும் விடுமுறை நாட்களில் விளையாடி மகிழுந்தும் என இருந்து வருகின்றனர்.
பருவ மழை காலங்கள் கூட விளையாட்டு மைதானம் முழுவதும் நீர் தேங்கா வண்ணம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முதல் விளையாட்டு மைதானம் என இது பெயர் பெற்றது.
இந்த விளையாட்டு அரங்கத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வதும் , விளையாட்டு வீரர்கள் தங்களை போட்டிகளுக்கு தயார் படுத்திக் கொள்வதும் என நூற்றுக்கணக்கானோர் வருகை புரிவதுண்டு.
இந்நிலையில் விளையாட்டு மைதானத்தின் பராமரிப்பு பணிகளை சரிவர மாவட்ட விளையாட்டு அலுவலர் மேற்கொள்வதில்லை எனவும் புகார் எழுந்து வந்தது.
இந்த நிலையில் அங்கு நேற்று இரண்டு பாம்புகள் இணைந்து நடனமாடி விளையாட்டு வீரர்களை மகிழ்வித்து நிலையில் அதை விரட்ட நினைத்த நிலையில் அவர்களை அந்த பாம்புகள் அச்சுறுத்தியதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைப் பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பாம்பு நடனம் ஆடுவதற்கு காரணம், விளையாட்டு மைதான நிர்வாகம் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாததே எனவும், பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தால் இது போன்ற விஷப் பாம்புகள் நுழைந்திருக்க வாய்ப்புகள் இல்லை எனவும் கண்டனம் தெரிவித்து பதிவுகள் எழுதி வருகின்றனர்.
மாவட்ட விளையாட்டு நிர்வாகம் உடனடியாக விளையாட்டு மைதானத்தை சுற்றி உள்ள புதர்களை அழித்து விளையாட்டு வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படாத வண்ணம் பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும் உள்ளது.
பல தனியார் அமைப்புகள் இதுபோன்ற சேவைகளுக்கு உள்ள நிலையில் அவர்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்களின் நாட்டு நல பணி திட்டத்தின் கீழ் இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம் எனவும் பொதுமக்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu