காஞ்சிபுரம் : பட்டு பூங்கா செப்.15-ல் துவக்கம், அமைச்சர்கள் உறுதி

காஞ்சிபுரம் : பட்டு பூங்கா செப்.15-ல் துவக்கம், அமைச்சர்கள் உறுதி
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் பட்டு பூங்கா பணியை அமைச்சர்கள் காந்தி, அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

காஞ்சிபுரம் பட்டு பூங்கா செப். 15-ல் துவக்கப்படுவது உறுதி என்று அமைச்சர்கள் காந்தி, அன்பரசன் தெரிவித்தனர்.

கைத்தறி பட்டு பூங்கா திட்டம் தொடங்கப்பட்டு 10ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தற்பொழுது பட்டுப் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கீழ்கதிர்பூர் கைத்தறி பட்டு பூங்காவில் 25% சதவிகித பணிகள் நிறைவுபெற்று நெசவாளர்கள் பட்டுச் சேலைகளை நெசவு செய்திட நெசவு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கைத்தறி பட்டு பூங்காவில் மேற் கொள்ளப்பட்டுவரும் பணிகளை கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி,

கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த கைத்தறி பட்டு பூங்கா பணிகளை திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆய்வு செய்து பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று பட்டு கைத்தறி பூங்கா துவக்கி வைக்கப்படும் என அறிவித்து இருந்தோம்.

அதன்படி தற்பொழுது 25% சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.வரும் செப்டம்பர்15 தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் பூங்கா வை துவக்கி வைக்க உள்ளோம் அதற்கான பணிகளை இன்று ஆய்வு செய்துள்ளோம்.

கைத்தறி பட்டு பூங்கா மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 18 ஆயிரம் பேர் பயன்பெற உள்ளதாகவும்,

இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்படும் பட்டுப் பூங்கா என்ற பெருமையும் பெற உள்ளது என அமைச்சர் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil