சியாமா சாஸ்திரிகளின் 260வது ஜெயந்தி இசைவிழா தொடங்கியது
கீர்த்தனைப் பாடலுக்கேற்ப ஓவியம் வரைந்து அசத்திய ஓவியர் குச்சி. சிவ்சங்கர்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மீது 120 பாடல்களை பாடிய வரும் , சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவருமான சியாமா சாஸ்திரிகளின் ஜெயந்தி தினம் ஆண்டு தோறும் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் கொண்டாடப் படுகிறது.
இவரது 260வது ஜெயந்தி தினம் இந்த ஆண்டு வரும் மே மாதம் 2 ஆம் தேதி வருவதை கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலும், காஞ்சிபுரம் சங்கர மடத்திலும் இசை விழா ஏப்.25 ஆம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 2 ஆம் தேதி வரை இசை விழாவாக நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் காமாட்சி கோயில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் தலைமையில் மங்கள இசையுடன் தொடங்கியது.
அதனையடுத்து திருப்பதி இசைப் பள்ளி வயலின் துறையின் தலைவர் வெங்கட் கிருஷ்ணா தலைமையிலான குழுவினரின் குரலிசை நிகழ்ச்சி நடந்தது.
திருப்பதி பிரபல ஆன்மீக கலை ஓவியர் குச்சி சிவசங்கர் குரலிசை வித்வான்கள் பாடும் ராகங்களில் வரும் காமாட்சியின் தோற்றங்களை ஒவ்வொரு பாடலுக்கும் உடனுக்குடன் வரைந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
ஐந்து நிமிட கீர்த்தனை பாடலுக்குள் ஓவியங்கள் வரைவை கண்ட பார்வையாளர்கள் மெய்மறந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu