அமைச்சர் உத்தரவை மீறி செயல்படும் கழிவுநீர் லாரிகள்: பொதுமக்கள் புகார்
காஞ்சிபுரம் - சென்னை சாலையில் பொன்னேரி கரையில் அமைந்துள்ள நீர் நிலைகளில் கழிவு நீரை விடும் வாகனம்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் இத்துறை அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இதில் குறிப்பாக அதிகளவில் பெறப்படும் புகாரில் முக்கியமான ஒன்றிய கழிவு நீர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட புறநகர் பகுதிகளில் தற்போது விரிவாக்க பகுதிகள் அதிகம் ஏற்பட்டுள்ளதால் பாதாள சாக்கடை திட்டம் அளிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், இதுபோன்ற வீடுகளில் இருந்து கழிவு நீர் எடுத்துச் செல்லும் லாரிகள் நீர் நிலைகளில் விட்டு மாசடைய செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளது.
இதனை கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கவனத்தில் கொண்டு இதனை தவிர்க்க வேண்டும் எனவும் இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்நிலையில் காஞ்சிபுரம் சென்னை செல்லும் சாலையில் பொன்னேரி கரை அருகே கழிவுநீர் லாரி அமைச்சரின் அறிவுரையை ஏற்காமல் சாலை ஓரம் இறுக்கி கழிவு நீரை அங்குள்ள நீர் நிலைகளில் விட்டு கொண்டிருந்தனர்.
இதனை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததை கண்ட லாரி ஓட்டுநர் விரைவாக கழிவு நீரை விடுவதை நிறுத்திவிட்டு லாரியுடன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைத் தவறு எனும் உணரும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவரது உரிமையாளர்கள் இதனை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறிய பின்பும் அதனை உதாசீனப்படுத்துவது அதிர்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu