/* */

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000 அபராதம்

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல் மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000 அபராதம்
X

சிறுமியை ஏமாற்றி விட்டதாக புகாரில் போக்சோ நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற அகிலன்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் ஐயமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த நாகதாஸ் என்பவரின் மகன் அகிலன் வயது 32. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை மறைத்துள்ளார்.

திருமணத்திற்குப்பின் குழந்தை பிறந்தவுடன் அவரை நிராகரித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடந்த 2016ல் 5 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அப்போது அகிலன் கைது செய்யப்பட்டார்.

அதன்பின் இவ்வழக்கு செங்கல்பட்டு போக்ஸா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் குற்றப்பத்திரிகை அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அகிலனுக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 366 சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிபதி ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் இவற்றைக் கட்ட தவறினால் ஓராண்டு காலம் சிறை விதித்தும் மற்றும் சட்டப்பிரிவு 417 படி ஓராண்டு சிறை தண்டனையும், சட்டப்பிரிவு போஸ்கோ அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறையில் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் கட்ட தவறினால் ஓராண்டு காலம் மெய்க்காவல் சிறை என நீதிபதி தமிழரசி தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு வெளியானதால் அகிலன் குடும்பத்தினர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

Updated On: 20 March 2023 12:30 PM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு