காஞ்சியில் விஜய் ரசிகர்களுக்கு கமகம சிக்கன் பிரியாணி விருந்து!
காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் எஸ்கேபி தென்னரசு தலைமையில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு சுட சட சிக்கன் பிரியாணி பரிமாறிய போது
தமிழகம் முழுவதும் இன்று திரைப்பட நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகளுடன் தொடங்கியது. காஞ்சிபுரம் பாபு திரையரங்கில் விஜய் நடித்த திரைப்படம் வெளியான ஒட்டி ஆயிரம் ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இன்று திரைப்பட நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் சிறப்பு காட்சிகளுடன் கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலையே சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் சிறப்பு காட்சி நடைபெற்று ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கு முன்பு மேளதாளம் நடனம் பட்டாசு வெடிப்பு என பல்வேறு வகைகளை தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் எஸ் கே பி தென்னரசு தலைமையில் பாபு திரையரங்கில் திரைப்படம் பார்த்துவிட்டு வரும் ஆயிரம் ரசிகர்களுக்கு சுடச்சுட 1மணி அளவில் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. கேசரி, வெங்காய பச்சடி, அவித்த முட்டை, கத்திரிக்காய் தொக்கு, வாழைப்பழம் மற்றும் சுடசுட சிக்கன் பிரியாணி ரசிகர்கள் அனைவருக்கும் தலைவாழை இலையுடன் பரிமாறப்பட்டு அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். ஏற்கனவே திரைப்படம் வெகு சிறப்பாக அமைந்த நிலையில் வெளியே ரசிகர்கள் இதுபோன்ற உணவுகளில் அனைத்தும் ரசிகர்களை மேலும் இன்பத்தில் ஆழ்த்தினர். மேலும் திரைப்படம் பார்க்க வந்த நபர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu