அரசு தடையை மீறி லாட்டரி விற்பனை: ஈடுபட்ட 14 பேர் கைது

அரசு தடையை மீறி லாட்டரி விற்பனை: ஈடுபட்ட 14 பேர் கைது
X

தமிழ்நாடு அரசு தடை செய்த லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்ட வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்.

காஞ்சிபுரத்தில் அரசு தடையை மீறி லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல நூறு தொழிற்சாலைகள் , பட்டு நெசவாளர் உள்ளிட்ட தொழிலாளர் தங்களது வருமானத்தின் பெரும் பகுதியை லாட்டரி பழக்கத்திற்கும், மதுப்பழக்கத்திற்கும் இழந்து வருவது வாடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து இருந்த போதிலும் வெளி மாநில லாட்டரிகளை கம்ப்யூட்டர் செல்போன் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், காட்டன் சூதாட்டம் தங்குதடையின்றி நள்ளிரவு வரை நடைபெறுவதாகவும், அதில் வருமானத்தின் 70 சதவீதத்தை இழந்து விடுவதாக குடும்ப பெண்கள் பெரும் புகார் எழுப்பிய நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அதிரடி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அவ்வகையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் , உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக ஈடுபட்டு வந்த பதினான்கு நபர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோன்று தொடர்ச்சியாக கண்காணிக்கும் பட்சத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனைகள் மற்றும் காட்டன் சூதாட்டங்கள் காஞ்சிபுரம் நகரில் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதற்காகவே தனி அலுவலகம் கடை வாடகை எடுத்து இதில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு காவல்துறையால் தொடர்ந்து ஈடுபட்டால் குண்டர் சட்டம் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாகவே உள்ளது

இந்நிகழ்ச்சியை குடும்ப பெண்கள் வரவேற்றாலும் தொடர்ந்து இதை கண்காணித்து இதிலிருந்து அவர்களை விடுபட செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!