காஞ்சிபுரம் அருகே ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்: வனத்துறை விசாரணை

காஞ்சிபுரம் அருகே ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்: வனத்துறை விசாரணை
X

வெளிமாநில லாரியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் செம்மரக் கட்டை.

காஞ்சிபுரம் சிறு காவேரிபாக்கம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த வெளிமாநில லாரியில் இருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் நெட்டேரி பகுதியில் தானிய தரகு வியபாரிகள் சங்க எடைமேடை இயங்கி வருகின்றது. இந்த எடைமேடையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்ற நெல் மூட்டைகளை எடை போடுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 5 மணியளவில் சங்க நிர்வாகிகள் எடைமேடை நிலையம் வந்த போது வெளிமாநிலத்தை சார்ந்த லாரி ஒன்று இருந்ததைக் கண்டனர். இதனைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் கேட்பாரற்று கிடந்த லாரியை சோதனை செய்தனர். அப்போது வெளிமாநில லாரியில் செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

உடனே அவர்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பிறகு சிவகாஞ்சி காவல் துறையினர் பாலுசெட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெளிமாநில லாரியில் இருந்த 64 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து மாவட்ட வன அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து வன அலுவலர்கள் செம்மரக்கட்டைகள் எங்கிருந்து வந்தது எனவும், தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்தும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது 64 செம்மரக்கட்டைகளையும் அளவீடுகள் எடுத்ததில் இதன் எடை சுமார் ஓரு டன் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!